சசிக்காக… சிறைக்கு ஆம்புலன்சில் டிவி, பிரிட்ஜ் அனுப்பிய எம்எல்ஏ!

--

பெங்களூர்,

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது.

சிறையில் சசிகலா சொகுசா இருக்க தேவையான டிவி, பிரிட்ஜ் போன்றவை ஆம்புலன்சு மூலம் சிறைக்குள் சிறைஅதிகாரிகளின் உதவியுடன் சென்றுள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து, தினசரி பல்வேறு செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் இவ்வளவு வசதியாக இருப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்கள் விவாதித்துவரும் நிலையில், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சிறை அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருந்ததுதெரிய வந்துள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை  பார்க்க வரும் விசிட்டர்ஸ் பிரிவின் பொறுப்பாள ராக  இருக்கும் கேஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் மகுநர் என்று டிஐஜி ரூபா குற்றம் சாட்டி உள்ளார்.

இவர் முலமே,  முன்னாள் ஜெயில் சூப்பிரடண்ட் கிருஷ்ணகுமாரின் அலுவலகத்தில், சிறை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்பும், அதிமுக எம்.பி., எம்எல்எக்கள் சசிகலாவை  சந்திக்க ஏற்பாடு செய்துள்ளது தெரிய வந்தது என்றும், ஆனால் சந்திப்பு குறித்து எந்தவித தகவல்களையும் பதிவு செய்வதில்லை என்றும் கூறி உள்ளார்.

எஸ்.ஐ. கஜராஜ் மகுனர், சசிகலாவுக்கு  சிறையினுள்  தனி அறை ஒதுக்கி,  அந்த அறையில் சசிகலா உபயோகத்துக்கு தேவையான  காய்கறிகள் மற்றும் பொருட்கள், தனி சமையலறை, பிரிட்ஜ் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக ரூபா கூறி உள்ளார்.

சசிகலா ரூமில் இருந்த அனைத்து வசதிகளும்,  எல்இடி டிவி, ஏர் கண்டிஷனர், சசிகலாவுக்கு தேவையான உணவு பொருட்கள் அனைத்தும் ஓசூரில் இருந்த வந்து அனுப்ப பட்டது தெரிய வந்தது என்றும்,

மேலும், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தேவையான உணவு பொருட்கள்  சிறை ஆம்புலன்சு மூலம் சசிகலாவின் அறைக்கு கடத்தப்பட்டதாகவும்,

இதற்கு உடந்தையாக பிஎஸ்எப் எஸ்.ஐ. கஜராஜ் இருந்ததாகவும்,  இவற்றை அனுப்பியது  ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி  என்பதும் தெரிய வந்ததாகவும் டிஐஜி ரூபா கூறி உள்ளார்.

சசிகலாவுக்கு இந்த வசதிகளை  ஏற்பாடு செய்து கொடுத்ததற்காக, சிறை அதிகாரி மகுனர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக லஞ்சம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும் கூறி உள்ளார்.

இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.