சார்ஜில் இருக்கும்போதே கேம் விளையாடிய மொபைல்போன் வெடித்து விபத்து: சிறுவன் கவலைக்கிடம்

கர்னூல்:

ந்திராவில் சிறுவன் ஒரவர்  செல்பேசியை சார்ஜில் இருக்கும்போதே கேம் விளையாடினார். அப்போது மொபைல்போன்  திடீரென வெடித்து சிதறியதால், காயமடைந்த சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக மொபைல்போன்கள்  சார்ஜில் இருக்கும்போது பேசக்கூடாது என்று அறிவுறுத்தப் படுவது உண்டு. ஆனால், ஒருசிலர் சார்ஜ் செய்துகொண்டே பேசுவதும், அப்போது எதிர்பாராத வகையில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதும் வாடிகையாகி வருகிறது.

இதுபோன்ற நிகழ்வுகளால் பலர் பாதிக்கபட்டு வருவதும், ஒருசிலர் மரணத்தை தழுவிய நிலையிலும், சார்ஜில் இருக்கும்போதே உபயோகிக்கும் பழக்கம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூலில்,  ஜெகன் ஆச்சாரி என்ற . மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவன், மொபைல் போனை சார்ஜ் செய்துக்கொண்டு கேம் விளையாடியுள்ளார். அப்போது கைப்பேசி வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் சிறுவனது இடது கையில் 3 விரல்கள் துண்டானது. மேலும் பலந்த ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட அவரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவனின் தந்தை கூறும்போது, சம்பவத்தன்று தனது மகன் தன் கைபேசி யினை எடுத்து விளையாடிக்கொண்டு இருந்ததாகவும், திடீரென கைப்பேசி வெடித்து சிதறியதாகவும், இனிமேல் சிறுவர்களிடம் பெற்றோர்கள் மொபைல் போனை கொடுக்காதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.