புதுடெல்லி:

பிரதமர் மோடி வாழ்க்கை வரலாற்று படத்தில் ட்ரைலர், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உருவாக்கப்பட்டுள்ளதாக ‘ஹப் போஸ்ட்’ இணையம் விமர்சித்துள்ளது.


ஹப் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், ஓமங் குமார் இயக்கிய பிரதமர் நரேந்திர மோடி என்ற படத்தில், நரேந்திர மோடியை சந்நியாசி என்றும், டீக்கடையிலிருந்து பிரதமர் பதவி வரை வந்த கடின உழைப்பாளி என்றும் படத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு பெற்ற வெற்றியிலிருந்து படம் தொடங்குகிறது. பாகிஸ்தானை தாக்கியதாகவும், அழித்ததாகவும் பல முறை வசனங்கள் வருகின்றன.
குஜராத் வன்முறையை திரித்துக் கூறியதுதான் இந்த படத்தின் ஹைலைட்.

குஜராத் கலவரத்தைக் கண்டு மோடி கலங்குவதாகவும், படுகொலையிலிருந்து குழந்தையை காப்பாற்றுவது போன்றும் காட்சி அமைத்துள்ளனர்.

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதாக மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டது மறைத்து கதையை திரித்துக் கூறியுள்ளனர். மாநிலம் முழுவதும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்வரை வெளியேற மாட்டேன் என மோடி சபதம் செய்யும் காட்சி உச்சகட்ட நகைச்சுவை.

சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாக்குதல் நடத்தும் முன்பு, முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என போலீஸாருக்கு மோடி கூறியிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.