ஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது! டிடிவி அணி வேட்பாளர் ஜெயக்குமார் ‘பலே’ தகவல்

தேனி:

நேற்று இரவு தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டியில் டிடிவி தினகரனின்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட பணம் ரூ.1.50 கோடி அதிமுகவுக்கு சொந்தமானது என்று  அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

ரூ.1,50 கோடி பணம் கைப்பற்றப்பட்ட ஆண்டிப்பட்ட அமமுக அலுவலகம்

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆண்டிப்பட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும், டிடிவி தினகரன் அணி வேட்பாளர் ஜெயக்குமாரின் தேர்தல் அலுவலகத் தில் நேற்று இரவு அதிரடி ரெய்டு நடைபெற்றது. இதில்  ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஆண்டிப்பட்ட  அமமுக வேட்பாளர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு சொந்தமான வணிக வளாகத்தில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நாங்கள்தான் தகவல் தந்தோம், அந்த பணம் தங்களது சொந்தமானது இல்லை என்று கூறி உள்ளார்.

அதிமுகவை காப்பாற்றுவதற்காக அந்த பணம் அமமுகவின் பணம் என பொய்யாக குற்றம் சாட்டு கிறார்கள். போலீசார் வானத்தை நோக்கி சுடாமல், எங்களை அச்சுறுத்துவதற்காக டம்மி புல்லட் மூலம் வணிக வளாகத்திலேயே சுட்டனர்” எனவும் வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஒரு கட்சி அலுவலகத்திற்குள் கைப்பற்றப்பட்ட பணம் மற்றொரு கட்சிக்கு சொந்தமானது என்று கூறி  என்று இவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்…

கேட்கிறவன் கேனையனாக இருந்தால், கேழ்வரகில் நெய் வடிகிறது என்ற பழிமொழிக்கு கேற்ப  உள்ளது இவர்களின் கூற்று.