சுவாச் பாரத்: கழிப்பறை கட்ட படுக்கைக்கு வா!: அதிகாரியின் கொடூரம்

 

டில்லி,

மோடி பிரதமராக பதவி ஏற்றதும் நாடு முழுவதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று  சுவாச் பாரத்…( தூய்மை இந்தியா) என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன் காரணமாக நாடு முழுவதும் தூய்மைப் படுத்தும் பணி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் திறந்த வெளி கழிப்பறை ஒழிக்கப்படும் என்றும், கழிப்பறை இல்லா வீடுகளில் இந்த திட்டத்தின்படி மத்திய அரசு கழிப்பறை கட்டி கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி த்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் இந்த திட்டத்தின் மூலம் தனது வீட்டிற்கு கழிப்பறை கட்ட வேண்டும் என்று கோரிக்கையுடன் அந்த பகுதி அரசு அதிகாரியை அணுகி உள்ளார்.

இதற்கு அந்த அதிகாரி தன்னை கவனித்தால் கழிப்பறை கட்டித் தருகிறேன் என்று கூறி உள்ளார்.

 

இந்த சம்பவம்  சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அந்த நகராட்சியின் துணை பொறியாளர் ஒருவர் இவ்வாறு கேட்டதாக அந்த பெண் புகார் கூறி உள்ளார்.

இதன் காரணமாக அந்த பொறியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.