மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்! திருப்பூரில் பரபரப்பு…

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் கத்தியுடன்  மர்ம நபர் ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது, மர்ப நபர் ஒருவர்  கத்தியுடன் நுழைந்தார். அவரது நடவடிக்கையை கண்ட காவல்துறையினர், அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

‘விசாரணையில், அவரது பெயர்  இளங்கோ என்பதும், அவரிடம் கத்தி மற்றும் சைக்கிள் செயின் இருந்ததும்  தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.