இஸ்ரோவை நினைத்து இந்தியாவே பெருமைக்கொள்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

வாழ்க்கையில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், இஸ்ரோவை நினைத்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைக்கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன் உடன் நீண்ட உரையாடலுக்கு பின்னர், விஞ்ஞானிகளிடம் பேசிய பிரதமர் மோடி, ”வாழ்க்கை முழுவதும் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். தற்போது நாம் செய்திருப்பது சாதாரனமான சாதனை இல்லை. இந்த நாடே இஸ்ரோவை நினைத்து பெருமைப்படுகிறது. நிச்சயமாக நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் வாழ்த்துக்கள். அறிவியல் வாஞ்ஞானத்திற்கும், நாட்டிற்கும் விஞ்ஞானிகள் மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறார்கள். நான் அவர்களுடன் இருக்கும். தைரியமாக முன்னோக்கி செல்லுங்கள்” என்று தெரிவித்தார்

பின்னர் இஸ்ரோ மையத்தில் இருந்து புறப்பட்ட அவர், தன்னுடன் இந்நிகழ்வை காண வந்திருந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கார்ட்டூன் கேலரி