மே 8-ந்தேதி மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: மார்க்சிய கம்யூனிஸ்டு

டில்லி:

திகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடு முழுவதும் மே மாதம் 8-ந்தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும்  பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் இருந்து விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணாக அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் அடுத்த மாதம் (மே) 8-ந்தேதி போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது  மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ அமைப்பு   தங்கள் கட்சிக்குழுக்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அதில்,‘நாட்டின் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கான தொகைக்கு வரி விலக்கு அளிக்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகிறது. இதில் பிற ஜனநாயக மற்றும் மக்கள் ஆதரவு அமைப்புகளும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The nationwide Protest against the central government on May 8: Marxist Communist announced, மே 8-ந்தேதி மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: மார்க்சிய கம்யூனிஸ்டு
-=-