தனுஷின் ‘மாரி-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

டிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகி வரும் மாரி-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர்-2 ம் தேதி வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

2015ம் ஆண்டு  தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாரி’. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி மோகன் எடுத்திருந்தார். இந்த படத்தில், ஏரியா தாதாவாக தனுஷ் நடித்திருந்தார். இது அவரது  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், மாரி படத்தின் 2ம் பாக்கம் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல்பாகத்தை இயக்கிய பாலாஜி மோகனே 2ம் பாகத்தையும் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தனஷூக்கு ஜோடியாக  சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்பட நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. படத்திற்கு வன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், மாரி-2  படத்தின்    ஃபர்ஸ்ட் லுக்  நவ.2 ம் தேதி வெளியீடுவதாக பட குழுவினரான வுன்டர்பார் பிலிம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

You may have missed