கிடப்பில் போட்ட விஷால் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி படம் மீண்டும் துவக்க திட்டம்….!

‘சக்ரா’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஆனந் சங்கர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டார் விஷால் .

இதில்தான் ஆர்யா வில்லனாக நடிப்பதாக இருந்தது. இமான் இசையமைப்பாளராக பணிபுரியவிருந்தார். ஆனால் பணப்பிரச்னையால் இப்படம் கைவிடப்பட்டது .

இந்நிலையில் இந்தக் கதையைக் கேட்ட வினோத் குமார், இதை நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்துள்ளார்.

அவர் இந்த படத்தில் விஷால் – ஆர்யாவே நடிக்கட்டும் என்று தெரிவிக்கவே படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.