சென்னை,

மைச்சர் சரோஜா மீது ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியதாக சென்னை  போலீசில் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரி  புகார் கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ரூ.30 லட்சம் மோசடி வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அடுத்ததாக அமைச்சர் 30 லட்சம் கேட்டதாக சிக்கியுள்ளார்.

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் மீனாட்சி. இவரிடம்,  பணி நிரந்தரம் செய்ய சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து மீனாட்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தன்னுடைய பணி நிரந்தரம் தொடர்பாக, அமைச்சர் சரோஜாவை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது பணி நிரந்தரம் செய்ய  30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், அப்படி தர முடியவில்லை என்றால்,  வேலையை விட்டு தானாக ஓடி விடு; இல்லாவிட்டால், உன் நடத்தை சரியில்லை என்று, அசிங்கப்படுத்துவேன் என, மிரட்டினார்.

அமைச்சர் சரோஜாவும், அவரது கணவரும், மாறி மாறி என்னை மிரட்டினர். நான் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம். அமைச்சர் சரோஜா, லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக, தகுந்த ஆதாரங்களுடன், கவர்னர் முதல் பிரதமர் வரை புகார் அளிப்பேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சரோஜாமீது புகார் கொடுத்தார். அப்போது, தனது உயிருக்கும், பணிக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்,

அமைச்சர் தன்னை மிரட்டியது தொடர்பான வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் மீனார்.

ஏற்கனவே தமிழக அமைச்சர்கள்மீது தொடர்ந்து புகார் வந்துள்ள நிலையில், தற்போது பெண் அமைச்சர் சரோஜாவும் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.