நெல்லை:

னுமதியின்றி கட்டப்பட்டதாக நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள விவிமினரல் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடம் இன்று நெல்லை கலெக்டர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை அருகே உள்ள முருகன்குறிச்சி பகுதியில் பிரபல மணல் மாபியா வைகுண்டராஜனின் 4 மாடி கட்டிடம் இயங்கி வருகிறது.

இந்த நான்கு அடுக்குமாடிக் கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வணிக வளாகத்தின் தரப்பில் இருந்து முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது

அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி சீல் வைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வைகுண்டராஜன்

ஏற்கனவே கடந்த மாதம்,  போலி ஆவனம் தயார் செய்து தாதுழ மணலை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விவகாரம் காரணமாக தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஏற்றுமதிக்கு தயாரான நிலையில் 14குடோன்களில் இருந்த 25000 மெட்ரிக் டன் எடை கொண்ட தாதுமணல் உள்ள குடோன்கள் அனைத்தும்  பூட்டி சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

https://patrikai.com/wp-admin/post.php?post=720007&action=edit