2017 ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் :

2017 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளா தாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2017ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களின் விவரம் கடந்த 3 நாட்களாக  அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், வேதியியல், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு கஷுயோ இஷிகுரோ என்பவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கார்ட்டூன் கேலரி