மானியமில்லா சிலிண்டர் விலை இந்த மாதம் 76 ரூபாய் உயர்வு!

மும்பை:

மானியமில்லா சிலிண்டர் விலை 76 ரூபாய் இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்று முதல்  696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணை நிறுவனங்கள் இந்த அதிரடி விலை உயர்வை அறிவித்து உள்ளன.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சமீபத்தில்,  சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடைபெற்ற ஆளிலிலா விமானம் தாக்குதலுக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறிது. இதன் காரணமாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் ரூ.681.50, கொல்கத்தாவில் ரூ.706, மும்பையில் ரூ.651 என்ற அளவில் மானியமில்லா சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ

தன்மூலம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

இதேபோல் சென்னையில் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படும் 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1199-ஆக இருந்தது. தற்போது ரூ.120 அதிகரித்து, ரூ.1319 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.