டெல்லி:

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,902ஆக உயர்வு இருப்பதாகவும் பலியானோர் எண்ணிக்கை  62லிருந்து 68ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதன்காரணமாக தமிழகம், மகாராஷ்டிரா உள்பட சில மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மக்களின் ஆதரவு இல்லாத காரணத்தால், வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 735 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2,301ல் இருந்து 2,804-ஆக அதிகரித்துள்ளது.

இதில், மகாராஷ்டிராவில் 490 பேரையும், தமிழ்நாட்டில் 411 பேரையும், டெல்லியில் 335 பேரும், கேரளாவில் 286 பேரும், உத்தரபிரதேசத்தில் 285 பேரும், ராஜஸ்தானில் 167 பேரும், தெலங்கானாவில் 158 பேரும், ஆந்திராவில் 132 பேரும் கொரோனாவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56-இல் இருந்து 68-ஆக உயர்ந்துள்ளது. இதில், மகாராஷ்டிராவில் 26 பேரும், குஜராத்தில் 8 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் உயிரிழந்திருக்கின்றனர்.

இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 162-ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.