சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு

சென்னை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 லிருந்து 143 ஆக உயர்ந்துள்ளது.

மிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் இதுவரை  34,828 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 22,610 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், இதுவரை 888 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில்  பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 8,089ஆக உயர்ந்துள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 8 ஆயிரத்து 89 பேரும், தண்டையார்பேட்டையில் 6 ஆயிரத்து 637 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்து 639 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போதைய நிலையில் ராயபுரத்தில் 2 ஆயிரத்து 309 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 29 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
இதேபோல், தண்டையார்பேட்டையில் இதுவரை 4 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்துள்ளனர். மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது, தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 838 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் 28 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்கள் எத்தனை என்பதை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி,  அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 50 தெருக்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன, அண்ணா நகர் மண்டலத்தில் 39 தெருக்களும், மற்ற  மண்டலங்களில் சேர்த்து, 54 தெருக்கள் உள்பட மொத்தம் 143 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 108 ஆக இருந்த நிலையில், சமீப நாட்களாக தொற்று பரவல் தீவிரமாகி வருவதையடுத்து, தெருக்களின் எண்ணிக்கையும் 143 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி