ஜப்பான்: தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை   உயர்வு

ஜப்பானின்  ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நில சரிவுகளால் பலி எண்ணிக்கை   உயர்ந்துள்ளது.

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 88 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. இதுவரை  58 பேரை காணவில்லை என்றும்.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடும் வெள்ளத்தில் வீடுகள் பல நீரில் அடித்துக்கொண்டு போய்விட்டன.  2 லட்சத்து 76 ஆயிரம் வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.  தாழ்வான பகுதியில் வசித்து வருகிற 20 லட்சம் பேரா அவர்களது  வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.

நிலச் சரிவுகள் மற்றும் வெள்ளத்தினால் பலர் தங்களது வீடுகளில் சிக்கி உள்ளனர்.  சிலர் மேற்கூரைகளில் தங்கியுள்ளனர்.

வெள்ள பேரிடரை எதிர்கொள்வதற்காக ஜப்பான் அரசு அவசரகால மேலாண் மையம் ஒன்றை பிரதமர் அலுவலகத்தில் அமைத்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய  2,310 பேர் நேற்று மாலை வரை மீட்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து இன்றும் சில பகுதிகளில் அதிகளவிலான மழை பெய்யலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ராணுவம், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மேற்கு மற்றும் தென்மேற்கு ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு இருக்கின்றனர்.

இதுகுறித்து ரதமர் ஷின்ஜோ அபே, “மேலும் பலரை காணவில்லை.  பலருக்கு உதவி தேவையாக உள்ளது.  தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என கூறினார்.