”ஒரே நாடு ஒரே தேர்தல்” கொள்கைக்கு ஒடிசா முதலமைச்சர் ஆதரவு

”ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற மோடியின் கருத்தை ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயிக் ஆதரித்துள்ளார். கடந்த வருடம் ஜூன் 17ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மாநில சட்டசபை தேர்தலையும், மக்களவை தேர்தலையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
naveen-patnaik
ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயிக் புதன்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த பிஜூ ஜனதா தளம் கட்சி ஆதரிப்பதாக கூறிப்பிட்டார். மேலும் ”மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதால் மற்றப்பணிகள் தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனை கருத்தில் கொண்டு மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிக்கிறோம்” என்று நவீன் குறிப்பிட்டார்.

இதேபோல் 2004ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்கள்ள் ஒரே நேரத்தில் நடைபெற்றதாக நவீன் நினைவு கூர்ந்தார். அடுத்து 2024ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களை ஒன்றாக நடத்த நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.