தமிழ்நாட்டில் உள்ள ஒரே டூரிங் டாக்கிஸ் கணேஷ் திரை அரங்கம்

வேலூர்

வேலூர் மாவட்டம் பூட்டுதாக்கு என்னும் சிற்றூரில்  தமிழ்நாட்டின் ஒரே டூரிங் டாக்கிஸ் அமைந்துள்ளது.

டூரிங் டாக்கிஸ் மற்றும் டெண்டு கொட்டாய் என அழைக்கப்படும் அந்தக் கால திரை அரங்குகளைப் பற்றி இக்கால தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.     ஒரு பெரிய டெண்டுக்குள் பெரிய திரையும் ஆங்காங்கே ஒலிபெருக்கிகளுடன் இந்த திரை அரங்கங்கள் காணப்படும்.   டூரிங் டாக்கிஸ் என்னும் பெயருக்கு ஏற்ப முன்பு இவை அடிக்கடி இடம் மாற்றப்படும்.    நிரந்தர அரங்க வசதிகள் செய்யப்பட்டிருக்காது.    மறந்து போன இந்த திரை அரங்குகள் பற்றி இப்போது தி நியூஸ் மினிட் அளித்துள்ள செய்தி இந்த அரங்குகளை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறது.

செய்தி ஊடகமான ‘தி நியுஸ் மினிட்’ வேலூர் மாவட்டம் புத்துதாக்கு என்னும் சிற்றூரில் உள்ள தமிழ்நாட்டின் ஒரே டூரிங் டாக்கிஸ் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.   அந்த செய்தியில் காணப்படுவதன் சுருக்கம் இதோ:

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூரில் கணேஷ் திரை அரங்கம் அமைந்துள்ளது.  அநேகமாக மாநிலத்தில் தற்போது உள்ள ஒரே டெண்டு கொட்டாய் இதுவாகவே இருக்கக் கூடும்.   இந்த திரைஅரங்க உரிமையாளர் கணேசன் 80களில் இந்த திரையரங்கை தொடங்கி உள்ளார்.   அவ்ர் எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஒரு திரை அரங்கில் டீக்கடை நடத்தி வந்துள்ளார்.   அந்த திரையரங்க முதலாளிகள் இவரிடம் அந்த தியேட்டரை விற்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் 7 டூரிங் டாக்கிசுகளும் இரண்டு தியேட்டர்களும் இருந்துள்ளன.  டூரிங் டாக்கிசுகளின் மவுசு குறைந்த நிலையில் இதை வாங்கிய கணேசன் இடத்தை சற்றே மாற்றி 85 ஆம் வருடத்தில் இருந்து நடத்த தொடங்கி உள்ளார்.    அதன் பிறகு ஒவ்வொரு டூரிங் டாக்கிசுகளாக மூடப்பட்டவே,  அந்த பகுதியில் உள்ள 20 கிராம மக்களுக்கு கணேஷ் திரை அரங்கம் மட்டுமே ஒரே பொழுது போக்காக மாறியது.   வேலூர், ஆற்காடு, விஷாரம், திருவல்லம் போன்ற பகுதிகளில் இருந்து 2 சக்கர வாகனங்களில் மக்கள் வரலாயினர்.

 

வழக்கமான மால்களை பார்த்த மக்கள் இது போல ஒரு வித்தியாச அனுபவங்களுக்காக இன்றும் கணேஷ் திரை அரங்கம் வருகின்றனர்.   இந்த அரங்கில் தரை டிக்கட் ரூ.25,  சேர் டிக்கட் ரூ.30 மற்றும் பாக்ஸ் ரூ.40 என விற்கப்படுகிறது.    நவீன க்யூப் டிஜிட்டல் முறையில் இந்த அரங்கில் திரைப்படம் திரையிடப்படுகிறது.    பாக்ஸ் வகுப்பில் குஷன் வைத்த இருக்கைகள் உள்ளன.   அதே போல 7-1 ஸ்டிரியோ சவுண்ட் பொருத்தப் பட்டுள்ளது.  தற்போது இந்த திரை அரங்கம் குறித்து கணேசனின் மகன் ரமேஷ் டிவிட்டர் மற்றும் முகநூலில் பதிந்து வருகிறார்.

தற்போது மாலை 6 மணி மற்றும் இரவு 10 மணி என இரு காட்சிகள் நடைபெறுகின்றன.    படத்துக்கு எத்தனை பேர் வந்தாலும் சரியாக 6.15க்கு திரைப்படம் ஆரம்பிக்கப் படுகிறது.   ரஜினிகாந்த், அஜித்குமார் மற்றும் விஜய் நடித்த படங்களுக்கு முதல்காட்சிக்கும் 500 டிக்கட்டுகளும் இரண்டாம் காட்சிக்கு 100-150 டிக்கட்டுகளும் விற்பனை ஆகின்றன.

கடந்த 80களில் இந்த திரையரங்குகளில் சிவாஜிகணேசன் படங்கள் திரையிடும் போது பெண்களுக்காக தனிக் காட்சிகள் திரையிடப்பட்டதாக கணேசன் தெரிவித்துள்ளார்.    சிவாஜி கணேசனின் ரசிகரான இவர்  அந்த சமயத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் 1000 டிக்கட்டுகள் விற்றுள்ளதை நினைவு கூறுகிறார்.   அத்துடன் அவர் அப்போது சுமார் 1000 பெண்கள் வரும் இந்த திரை அரங்கில் தற்போது வெறும் 8-10 பெண்கள் மட்டுமே அதுவும் 6 மணி காட்சிக்கு மட்டுமே வருவதாக தெரிவிக்கிறார்.

Thanks to THE NEWS MINUTE