4ந்தேதி வரை கட்டாயமில்லை: அசல் ஓட்டுநர் உரிமம் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை:

மிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், வரும் 4ந்தேதி வரை அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது.

ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவுக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பபட்ட வழக்கில், இன்றைய விசாரணையின்போது, ஒரிஜினில் வைத்திருக்க   தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட்டுகருத்து தெரிவித்து உள்ளது.

பின்னர் பிற்பகல் விசாரணை நடைபெற்றது. அப்போது லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வரும் 4ந்தேதி வரை ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டியது கட்டாயமில்லை என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.