ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய பஞ்சாப் முன்னாள் நீதிபதி வஷிஸ்டர் தலைமையில் குழு அமைப்பு

டில்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. ஆய்வு குழு தலைவராக பஞ்சாப், அரியானா உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே. வசிஷ்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் கடந்த 20ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில்  குழு  அமைத்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற வேண்டும்  6 வாரங்களுக்குள் தங்களது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகள் விசாரணை செய்யக்கூடாது என வேதாந்தா நிறுவனம் வாதிட்டது. இந்த நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெ.வசிஷ்டர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தக் குழுவில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த மே மாதம் 13ந்தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட் டத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையை  நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி