மதுரை உணவகங்களில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே…

மதுரை:
கொரோனா தீவிரமடைந்து வரும் மதுரையில்  ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங் களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 3423 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  51 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை 967 பேர் சிகிச்சை குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  2405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 6ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களும் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரையில் உள்ள  உணவகங்களில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று  மதுரை மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் அறிவித்து உள்ளது.