ஜூலை 17 ல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்!

டில்லி,

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 17ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் ஜூலை 24ந்தேதியுடன் முடிவடைவ தால்,  புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17ந்தேதி நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப்போட வசதியாக 17ந்தேதி தொடங்கப்படுகிறது.

பாராளுமன்ற விவகார அமைச்சரவை குழு  தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று (ஜூலை 23) மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது . ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆகவே அன்று முதல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முதல்நாள் கூட்டத்தில்  லோக்சபா எம்.பி., வினோத் கண்ணா, ராஜ்யசபா எம்.பி., பல்லவி ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும்.