பீஜிங்:

கோரோனா வைரஸ் தாக்குல் நோயாளி சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த சம்பவம், நான்சாங் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சீனாவை பயமுறுத்தி வரும் கோரோனா வைரஸ் தாக்குதலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பல மாநிலங்களிலும் வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. இதன் காரணமாக, பல மாநிலங்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளது. அங்கு தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிர்க்கொல்லி வைரசான கோரோனா வைரஸ், நிமோனியா காய்ச்சலின் ஒரு வகை என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல்   இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் உள்பட பல நாடுகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், சீனாவின்  நாஞ்சாங் பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்த மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளி, நோய் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது சீன மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுவரை சீனாவில் கோரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர், நோய் குணமாக்கப்பட்டு உள்ளதாகவும் நாஞ்சாங் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. ஜியாங்சி மாகாணத்தில் குணப்படுத்தப்பட்ட முதல் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி இவர் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து இதுவரை சுமார் 60 பேர் குணப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.