டெல்லி:
கொரோனா தொற்று பரிசோதனைக்கு  பி.சி.ஆர் சோதனைக் கருவியே சிறந்தது என இந்திய மருத்துவக் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், விரைவாக சோதனை செய்ய சீனா மற்றும் கொரிய நாடுகளில் இருந்து ரேபிட்கிட் சோதனைக் கருவிகள் லட்சக்கணக்கில் வாங்கப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தப்பட்டதில் பலரது சோதனை முடிவுகள் தவறுதலாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, ரேபிட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில்,  உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி குறித்து ஆராயவே ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா சோதனைக்கு பி.சி.ஆர் கருவி மூலம் சோதனை செய்வதே சிறந்தது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்து உள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து சுகாதார ஊழியர்களும், கடுமையான சுவாச நோய் உள்ள அனைத்து நோயாளிகள்,  ஐ.எல்.ஐ (இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்- சளி, இருமல், காய்ச்சல்) உள்ளவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்யப்பட வேண்டும்.
இந்தசோதனை சோதனையில், , அவர்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லையேல்  ஏழு நாட்களுக்குப் பிறகு விரைவான ஆன்டிபாடி சோதனை நடத்தப்பட வேண்டும்.  அது நேர்மறையாக மாறினால், அந்த நபர் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்.  இதற்கிடையில், நோயாளிகளுக்கு கொரோனா  அறிகுறிகளும் காட்டத் தொடங்கினால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும் போது ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளைப் பெறுவது அவசியம் என்று வலியுறுத்தி இருந்தது. இந்த சோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் இந்த சோதனை முடிவுகள் வர தாமதம் ஆவதால், விரைவாக சோதனை முடிவுகளை அறியவே ரேபிட் கிட் வாங்கப்பட்டது. ஆனால், அதன்  முடிவுகள் தவறாக வருவதால், அதற்கு தடை விதிக்கப்பட்டு,  மீண்டும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளது.