பணம் இருப்பதாக நினைத்து டீத்துள் கண்டெய்னரை மடக்கிய பொதுமக்கள்… ! கோவை அருகே நள்ளிரவில் பரபரப்பு

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே பச்சை கலர் கண்டெய்லர் லாரியை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், கண்டெய்னரில் பணம் கடத்தப்படுவதாக எண்ணி அதை மடக்கினர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, அந்த கண்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், கண்டெய்னரில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் டீத்துள் பண்டல்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கண்டெய்னர் லாரி கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பபட்டு விசாரணை நடைபெற்றது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆத்துப்பா‘லம் பகுதி. இந்த வழியாக லாரிகள் கேரளாவுக்கு செல்வது வழக்கம். நேற்று இந்த வழித்தடத்தில், பச்சை நிறத்தி லான கண்டெய்னர்  ஒன்று வேகமாக சென்றது. இதைக்கண்ட அந்த பகுதி மக்கள், அதில் பணம் இருக்கலாம் என்று எண்ணி லாரியை மடக்கினர். இந்த தகவல் அந்த பகுதியில் பரவ ஏராளமா னோர்  திரண்டனர்.

லாரி ஒட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் கண்டெய்னரை திறக்க வலியுறுத்தினர். அப்போது  லாரி ஒட்டுனர் இரும்பு கம்பியால் அடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் தேர்தலில் கொடுப்பதற்கான பணம் இருப்பதாக சந்தேகமடைந்த பொதுமக்கள் வாகனத்தை சிறைப்பிடித்தனர்  அதே சமயத்தில் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

கண்டெய்னர்  டிஜிட்டல் லாக் போடப்பட்டிருந்ததால் அதனை திறக்க இயலவில்லை. ஆனால், கண்டெய்னரை திறக்காமல் கலைய மாட்டோம் என்று மக்களும் பிடிவாதமாக இருக்க நள்ளிரவு வரை பரபரப்பு நீடித்தது. அதையடுத்து, பொதுமக்களை  காவல்துறையினர்  தடியடி நடத்தி மக்களை கலைத்துவிட்டு, கண்டெய்னர் லாரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனை திறந்து பார்த்தால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தேயிலைகள் கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது, கடந்த 2017ம்ஆண்டு இதுபோன்று கண்டெய்னரில் எடுத்துச்செல்லப்பட்ட 570 கோடி கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.