“என்னைக் கொல்ல சதி!” : யுவராஜ் புது வாட்ஸ் அப் செய்தி

download (2)

சேலம்: விஷ்ணு பிரியா வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் உள்ள யுவராஜ்  தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ். திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி, அந்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோயிலுக்கு சென்றபோது, அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது.

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், காவல்துறையினரிடம் சரணடைந்தார்.

இதற்கிடையே, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்து வந்து திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், சிறையில் உள்ள யுவராஜ், தனது உறவினர் ஒருவரிடம், டி.எஸ்.பி கொலை குறித்து போனில் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது.  அதில், ”சி.பி.சி.ஐ.டி  போலீஸ், கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடுத்த காசுக்கு மேல கூவுறேன்டாங்ற மாதிரி மக்களோட வரிப்பணத்துல சம்பளத்த வாங்கிக்கிட்டு, அரசியல்வாதிகளுக்கு கூலிப்படையாக செயல்பட்டுக்கிட்டு இருக்குது.

கோர்ட்ல பச்சையா பொய் சொல்றாங்க. எப்படியும் உண்மை வெளியே வந்து விடக்கூடாதுன்னு மூடி மறைக்கிறாங்க. யுவராஜ் வெளியே வந்துறக்கூடாதுங்றதுல தெளிவா இருக்காங்க. எலக்சனுக்கு முன்னாடி வெளியே வந்துறக்கூடாதுன்னு இவங்களுக்கு கொடுத்த அசைன்மெண்ட். இந்த அசைன்மெண்ட் தெளிவாக முடிச்சிட்டாங்க. அடுத்து  யுவராஜ் உயிரோடவே ஜெயிலைவிட்டு வெளியே வரக்கூடாதுனு முடிவெடுத்திருக்காங்க.

அடுத்தது, அ.தி.மு.க ஆட்சிதான் வரும். அதனால, ஜெயில்லயே போட்டுறலாம்னு ஒரு டீம் உருவாக்கிட்டாங்க. அதுக்கும் சி.பி.சி.ஐ.டி உடந்தை. ஏழு மாசமா விஷ்ணு பிரியா வழக்கை கண்டுபிடிக்க முடியாம இல்ல. எப்படி வந்து இத மூடி மறைக்கலாம்னுதான் போராடிக்கிட்டு இருக்குது. இவங்க செய்யிறது  எல்லாம் அயோக்கியத்தனம். விஷ்ணு பிரியாவோட மரணத்தை மொத்தமா மூடி மறைக்கிற வேலையிலதான் சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு. இவங்க உண்மையெல்லாம் வெளிக்கொண்டு வரல.

விஷ்ணுபிரியா மரணத்துக்கு காரணமான டிபார்ட்மெண்ட் ஆளு யாருனு உலகத்துக்கே தெரியும். அது சி.பி.சி.ஐ.டி.க்கு தெரியாதா என்ன? இது நான் வெளியே வந்தா தெரிஞ்சிடும்னு என்னென்ன அயோக்கியத்தனம் பண்றானுங்க பாருங்க. அரசு துறையில் இருக்கிற பலர் இன்றைக்கு அரசியல்வாதிகளுக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். பொதுமக்கள் என்னக்கி விழிப்பு உணர்வு அடைஞ்சி, ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் ஓட்டு போடாம, உண்மையா எவனாவது இருக்கானான்னு பாத்து ஓட்டு போட்டாங்கனா வௌங்கும்.

முதலமைச்சரோ, எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ எவனாயிருந்தாலும், என்னைக்கு வந்து பப்ளிக்ல வெச்சி செருப்பால அடிக்கிறாங்களோ அன்னக்கிதான் வந்து நாடு திருந்தும். பொதுமக்கள் திருந்தினால்தான் நேர்மையான அதிகாரிகளால பணியாற்ற முடியும். இல்லன்னா விஷ்ணு பிரியா மாதிரி சாகடிக்கப்பட வேண்டியதுதான். முத்துக்குமாரசாமி மாதிரி ரயில் முன்னாடி பாய்ஞ்சி சாக வேண்டியதுதான்” என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.