மது குடிப்பதை வீடியோ எடுத்தவரை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்..

டெல்லியில் உள்ள ஷாபத்டைரி காவல்நிலையத்தில் தலைமைக்காவலராக பணியாற்றும் சுரேந்தர், வேலை முடிந்து தனது காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

உடற் பயிற்சி கூடம் நடத்தும் தீபக் என்பவர், வழியில் ‘லிப்ட்’ கேட்டு சுரேந்தர் காரில் ஏறியுள்ளார். புத்தவிகார் ஓட்டல் அருகே இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.

அதனை தீபக் வீடியோ எடுத்துள்ளார்.’’ சீருடையில் இருப்பதால், மது குடிப்பதை வீடியோ எடுக்காதே’’ என்று சுரேந்தர் பலமுறை கூறியும் அதனை தீபக் பொருட்படுத்தவில்லை.

தொடர்ந்து வீடியோ எடுத்ததால் ஆத்திரம் அடைந்த தலைமைக்காவலர் சுரேந்தர், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் தீபக்கை இரு முறை சுட்டுள்ளார்.

மார்பில் குண்டு பாய்ந்த தீபக் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து சுரேந்தர் கைது செய்யப் பட்டார். கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலையில் இருந்தும் சுரேந்தர் ’’டிஸ்மிஸ்’’ செய்யப்பட்டுள்ளார்.

-பா.பாரதி.

You may have missed