லக்னோ,

ஆர் எஸ் எஸ் அமைப்பின் வழிகாட்டுதலில் உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், முதலமைச்சராக பரிந்துரைக்கப்பட்ட ஆதித்யநாத் ஒரு இந்து அடிப்படைவாதி என்றும்  வகுப்புவாதம் தூண்டிவிட்டது உள்பட அவர்மீதான  பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதிய ரீதியான பார்வை அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ள அந்த அறிக்கையில், இப்படிப்பட்ட  சூழலில் உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும், மதசார்பற்ற அமைப்புகளையும் இணைத்து சமூக ஒற்றுமையையும், அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.