மக்களின் நலனை புறக்கணித்து அரசியல் கட்சி நடத்தமுடியாது: முத்தரசன்

ஈரோடு:

க்களின் நலனை புறக்கணித்து அரசியல் கட்சி நடத்த முடியாது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

தமிழகத்தில் ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்பட 13 மாவட்டங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் சாலையோரங்கள் வழியாக புதைவட கேபிள்களாக மின்சாரம் கொண்டு செல்லும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தால் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் கேபிள் மூலமாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிககை எடுக்க வேண்டும் என்றார்.

. ஈரோடு பவானி ஆற்றில் மனித கழிவுகள் கலக்கப்படுகிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் ,   கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் அரசு அடக்குமுறைகளை கையாள்வதை விட்டு விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றவர்,  கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தால் புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில்,  கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், புயல் பாதிப்புகளுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. நிவாரண பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது என்றவர்,மக்களின் நலனை புறக்கணித்து அரசியல் கட்சி நடத்த முடியாது என்றும் எச்சரித்தார்.

வரும்  27,28,29 தேதிகளில் பெருந்துறையில் மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: can not ignore people, Comunist Mutharasan, mutharasan, The political party, அரசியல் கட்சிகள், இ.கம்யூ முத்தரசன், உயர் அழுத்த மின்கோபுரங்கள், முத்தரசன்
-=-