ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் தூத்துக்குடி பகுதியில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை:

ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டுள்ள நிலையில்,  தூத்துக்குடி பகுதியில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ள தாக தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொிவித்துள்ளது.

உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த மக்கள் போராட்டம் கடந்த மே  மாதம் 22ந்தேதி விசுவரூபம் எடுத்தது. அன்றைய போராட்டத்தில்  காவல்துறையினர் நடத்திய  துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். பலர் கை கால்களை இழந்து சிகிச்சை பெற்றனர்.

இதையடுத்து,  ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தமிழக அரசு கடந்த மே மாதம் 28ந்தேதி  அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டில்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்து விசாரித்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஆலை நிர்வாகம் பல்வேறு பணிகளை ரகசியமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு அந்த பகுதியில் காற்றுமாசு வெகுவாக குறைந்துள்ளதாக  தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

காற்றின் தரக்குறியீட்டு எண் தொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடியில் காற்றின் மாசின் அளவு கணிசமாக குறைந்துள்ளது கண்டறியப் பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சல்பா் டை ஆக்சைடின் அளவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.