சென்னை,

மிழகம் நிதி பற்றாக்குறையால் தத்தளித்து வருவதை  இன்று தாக்கல் செய்த நிதி அறிக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

ரூ.3,14,366 கோடி கடனில் தத்தளித்து வருவதை உறுதிபடுத்திய பட்ஜெட், நிதி பற்றாக்குறை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளது.

தற்போது, ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை உள்ளதாகவும், 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் நிதி குறித்த விவரங்கள்….

• அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.

• கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.

• மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு

•  விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.

• மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி

• மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.

• மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.

• தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.

• தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.