சென்னையில் திமுக முன்னிலை: வெள்ள பாதிப்பு காரணமா

--

 

download (1)
சென்னை: வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்த சென்னையில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக முன்னணி வகிக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென நள்ளிரவில் திறந்துவிட்டு சென்னை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா அரசுக்கு எதிராக திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தது. இது குறித்து  மக்களை ஈர்க்கும் வகையிலான விளம்பரங்களை தொடர்ந்து திமுக வெளியிட்டு வந்தது.
திமுகவின் இந்த வியூகத்திற்கு ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.  பகல் 12 மணி நிலவரப்படி, சென்னையிலுள்ள 16 தொகுதிகளில் 12 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருக்கிறது.

அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி போன்றோரே தோல்வி முகத்தில் இருக்கிறார்கள். அதே போல ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை வகித்தாலும், வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை.

திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சென்னையில் கடந்த தேர்தலில் அதிமுக அதிக இடம் பெற்றது. ஆனால், இம்முறை திமுகவின் மீண்டும்  திமுகவின் கோட்டையாக சென்னை மாறும் என்று தெரிகிறது.