ஃபிபா 2018: சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!

டில்லி:

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.  பிரதமர் மோடி  ஆகியோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர்  கண்டுகளித்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின், இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், குரோசியா அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பிரான்சின் வெற்றிக்கு உலக நாடுகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்

இது குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

துணைஜனாதிபதி வெங்கைநாயுடுவும் பிரான்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

அதுபோல  பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ” உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை” என பதிவிட்டுள்ளார்.

You may have missed