சென்னை:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எழுவரின் விடுதலை தொடர்பாக அதிமுக அரசு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் மீது முடிவெடுக்க கோரி ஆளுநரிடம் ஒப்படைத்தது அதிமுக அரசு. ஆனால், ஆளுநர் இன்னமும் முடிவெடுக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9ம் தேதி விசாரணைக்காக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.