தகிக்கும் தங்கத்தின் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.488 விலை உயர்வு….

சென்னை:

மெரிக்கா, ஈரான் இடையே நடைபெற்று வரும் ராணுவத் தாக்குதல் காரணமாக, நாட்டின் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று ஒரே நாளில், சரவனுக்கு ரூ.488 ரூபாய் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர்களுக்கு நீண்ட நெடுங்காலமாகவே தங்கத்தின் மீது தீராத மோகம் உண்டு. இதன் காரணமாக நாட்டிலேயே அதிக அளவில் தங்கம் விற்பனையாகும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. உலக வர்த்தகத்துக்கு தகுந்தாற்போல, சில ஆண்டுகளாக   தங்கத்தின் விலை எகிறிக் கொண்டே செல்கிற நிலையில், தற்போது அமெரிக்கா, ஈரான் தொடங்கியுள்ள ராணுவ தாக்குதல் காரணமாக, தங்கத்தின் விலை தகிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், கிராம் ஒன்று ரூ.3732 விற்பனையான ஆபரணத் தங்கம் இன்று கிராம் ஒன்று ரூ.488 உயர்ந்து, கிராம் ரூ. 3793 ஆகவும், சரவன் (8கிராம்) ரூ. 37,930 உயர்ந்துள்ளது. இது   மக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் விலை இதுவரை ரூ.30 ஆயிரத்தை தாண்டாமல் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வந்தது. ஆனால்,  இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்கத்தின் அதிரடி விலை உயர்வு மக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:  குட்ரிட்டர்ன்ஸ்