மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை….! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.528 உயர்வு

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து சவரன்  ரூ.31,432க்கு ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவ  உச்சத்தைத் நோக்கி சென்று கொண்டிருக் கிறது. நடப்பு ஆண்டு  ஜனவரி முதல்  தங்கம் விலை 30ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது 31 ஆயி ரத்தை தாண்டி உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஈரான் – அமெரிக்க இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தங்கத்தின் விலையும் வரலாறு காணாத உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 3 ந்தேதி சரவனுக்கு ரூ.488 ரூபாய் உயர்ந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று சவரனுக்கு 528 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நேற்று தங்கம் கிராம் ஒன்று ரூ.3863 ஆக இருந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 3929 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சவரன் ஒன்று ரூ.31,432 ஆக அதிகரித்து உள்ளது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு வரை ரூ.30 ஆயிரத்தை தாண்டாமல் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வந்தது. ஆனால்,  இந்த ஆண்டு தொடங்கியது முதல் விலை உயர்ந்து வந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.