Random image

நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைவு: சந்திரபாபு நாயுடு நடவடிக்கை

கோதாவிரி:

நாளை முதல் ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்று ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரி வாய்வு விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் முழு வேலை நிறுத்தம் (பாரத் பந்த்) நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரி வித்துள்ள நிலையில், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதன் காரணமாக இன்று பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 குறைக்கப்படும் என்றும், இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே   பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்டுள்ள வாட் வரியில் 4 சதவிகிதம் குறைக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர்  வசுந்தர ராஜே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.