Random image

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு: முதல்வர் குமாரசாமி அதிரடி

பெங்களூரு:

ர்நாடகா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைக்கப்படுவதாக மாநில முதல்வர் குமாரசாமி  தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,  கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்து அம்மாநில முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே கேரளா மாநிலத்தில் லிட்டருக்கு 1 ரூபாயும், ஆந்திராவில் லிட்டருக்கு 2 ரூபாயும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 சதவிகிதமும் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்நாடகாவிலும் ரூ.2 குறைக்கப் பட்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர்  குமாரசாமி அறிவித்துள்ளார். இந்த வரி குறைப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை கர்நாடகாவில் 2 ரூபாய் வரை குறையும் என தெரிகிறது.

டாலருக்கு நிகரான  இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், அதைப்பற்றி ரதமர் நரேந்திர மோடியோ, மத்திய அரசோ கண்டு கொள்ளாமல் உள்ளது. இது பொதுமக்களிடையே கடுமையாக அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் இன்றைய  பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 85.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாக உள்ளது.