விவசாயிகள் சாவுக்கு பிரதமரே காரணம்: மோடிமீது பி.ஆர். பாண்டியன் போலீஸில் புகார்!

--

கொரடாச்சேரி,

ச்சநீதி மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத பிரதமர் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி பி.அர்.பாண்டியன் காவல் நிலையததில் புகார் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டும், அரசிதழில் வெளியிடப்பட்டு  4 ஆண்டுள் ஆகியும் பிரதமர் நரேந்திர மோடி அதனை ஏற்க மறுப்பதால் அவர்மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொட்ர வேண்டும் என்று  தமிழக  அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கொரடாச்சேரி போலீசில் புகார்  கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டு (2016-17) கர்நாடகாவில் இருந்து  தண்ணீரை பெற்று தர மோடி மறுத்ததால் தமிழகத்தில் இதுவரையிலும் 400-க்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சியால் குளம், குட்டைகள், ஏரி உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் முற்றிலும் வறண்டுள்ளது.

குடிநீரின்றி பெண்கள் காலி குடங்களுடன் அலைகிறார்கள். இதனை உணர்ந்த உச்சநீதிமன்றம் உடனடியாக 2000 கனஅடியை உடனடியாக விடுவித்து

தமிழக மக்களை பாதுகாக்க பல முறை உத்திரவிட்டும் பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இது முற்றிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

400 விவசாயிகள் தற்கொலைக்கு பிரதமரே தூண்டுகோளாக இருந்துள்ளார். எனவே, அவர்மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து. உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.