2019 பொதுத் தேர்தலில் பாஜக வுக்கு வெற்றி வாய்புக்கள் குறைவு : செய்தி ஊடகம்

டில்லி

ரும் 2019 தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ளதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக முயன்று வருகிறது.   அந்தக் கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காங்கிரஸுடன் இணைய தயாராகி வருகின்றன.   இதனால் தேர்தல் களம் இப்போதே ஓரளவு சூடு பிடித்துள்ளது.   இது குறித்து பிரபல செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், “கடந்த 2014 தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் 64 தொகுதிகளில் தோல்வி பெறும் வாய்ப்புக்கள் உள்ளன.    எதிரிக்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்தால் இந்த வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.    அதாவது காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தள்,ராஷ்டிரிய ஜனதா தள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் மஜத உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் இணைய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் இணைந்து வேறு இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன.   தமிழ் நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி இன்னும் தொடர்ந்து வருகிறது.   அத்துடன் தமிழ் நாட்டில் பாஜகவுக்கு சென்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிலை கர்நாடகா மாநிலத்திலும் நிலவுகிறது.   பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து இங்கு ஆட்சி அமைத்துள்ளதால் அந்த கூட்டணி வரும் பொதுத் தேர்தலிலும் தொடரும் என்பது தெளிவாக தெரிகிறது.

டில்லியில் தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல மதிப்பு உள்ளது.   மேலும் நேற்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு அக்கட்சிக்கு கிடைத்துள்ள ஊக்க மருந்து எனவே கூறலாம்.  ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இணைந்தால் அது நிச்சயம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை அளிக்கும்.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்துக் கொண்டே நிதிஷ்குமார் காங்கிரசுக்கான கூட்டணிக்கு மறைமுக அழைப்பு விடுத்து வருகிரார்.  அத்துடன் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனும் தற்பொது மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கி உள்ளார்.  இவர்கள் இணைந்தால் பாஜகவுக்கு அது மிகவும் கடுமையான போட்டியாக அமையும்.” என ‘தி பிரிண்ட்’ தெரிவித்துள்ளது.