மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை: பரபரப்பு தகவல்கள்

அருப்புக்கோட்டை:

ல்லூரி பேராசிரியை ஒருவர்,  மதிப்பெண் ஆசைக்காட்டி மாணவிகளை  தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர், தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அதுபோல் தற்போது பல்கலைக்கழக தேர்வுகள் முடிவடைந்து தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி உள்ளது.

இந்த நேரத்தில், தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளை, தன்னுடன் இணைந்துர  விடை திருத்தும் பணியில் ஈடுபட்டு வரும் சக பேராசிரியர்கள  மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளை திருப்திபடுத்தும் நோக்கில் மாணவிகளை மறைமுகமாக விபச்சாரத்திற்கு அழைத்துள்ளது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என்று கூறியும், அவர்களை விடாமல் பேசி வசப்படுத்தும் விதமாக சுமார் 19 நிமிடம் பேசியிருக்கிறார் அந்த பேராசிரியை. அப்போது, பல்கலைக்கழக பேராசிரியர்களை திருப்திபடுத்தும் மாணவிகளுக்கு அதிக அளவில் மதிப்பெண்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த பேராசிரியை இதுபோல தனது கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுபோல ஏற்கனவே ஒரு சில மாணவிகளை இந்த பேராசிரியை அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற  மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பேராசிரியையின் பின்னணியில் கல்லூரி நிர்வாகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த விபரிதமான அழைப்புக்கு பின்னணியில் இருக்கும்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து,  பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்டு செய்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுவாக பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் இதுபோன்ற முறைகேடான செயல்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள் இதுபோல தங்களது கல்லூரியின் தரத்தை உயர்த்தும் வகையில், பாலியல் பெண்களையோ அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவிகளையோ, அதிக மதிப்பெண் வழங்கி தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக  வற்புறுத்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக வும் கூறப்படுகிறது.

வேலியே பயிரை மேய்ந்தது போல, குருவாக திகழும் ஒரு பேராசிரியை  மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டியவர், ஒழுக்கக்கேடான செயலுக்கு மாணவிகளை மூளைச்சலவை செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.