ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: 

க்களுக்கு கேன்சர் உள்பட  பல்வேறு பாதிப்புகளை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து  போராடி வருகின்றனர்.

தற்போது அவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி பகுதி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்தின்   ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே ஸ்டெர்லைட் காப்பர் ஆலை திறக்கும்போதே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மத்திய மாநில அரசுகளின் தவறான பிரசாரம் காரணமாக ஆலை திறக்கப்பட்டது.

நச்சு புகையை வெளியிடும் ஸ்டெர்லைட்

ஆனால்,  மத்திய மாநில அரசுகளின் உறுதிமொழிமீறி ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆலையில் இருந்து வெளியாகி வரும் புகை காரணமாக அந்த பகுதியே சில நேரங்களில் மேக மூட்டம் போல புகை மூட்டமாக மாறி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே  ஸ்டெர்லைட் ஆலைக்கு, சிப்காட் நிறுவனத்தின் மூலம் 640 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி ஆலையின் விரிவாக்கத்துக்கு ஏற்பாடுகளை செய்ய மத்திய மாநிலஅரசுகள் அனுமதி அளித்து உள்ளன.

ஸ்டெர்லைட்  ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுகள் மற்றும் புகை காரணமாக அந்த பகுதியில், புற்றுநோய், கண் நோய் ஏற்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெண்கள்,  குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த பிப்ரவரி மாதம்  முதல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தை கையெலெடுத்து உள்ளனர்.‘

நச்சு ஸ்டெர்லைட் மூடுவது தமிழர்களின் கடமை எனவே ஒட்டு மொத் தமிழகமும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது, அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று முதல் தூத்துக்குடி கல்லூரி மாணவர்கள் களத்தில் குதித்துள்ளனர். இந்த மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும் என்றும், மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல, ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்றும் கூறி வருகின்றனர்.

 

நச்சு ஸ்டெர்லைட் மூடுவது தமிழர்களின் கடமை எனவே ஒட்டு மொத் தமிழகமும் அணிதிரள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுடன் மாணவர்களும் களம் இறங்கியதால் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.