சின்மயியிடம் வைரமுத்து மகன் கேட்ட கேள்வி

திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் புகார்களை கூறி வருகறார்  திரைப்பாடகி சின்மயி.

மேலும், தன்னுடன் சேர்த்து இதுவரை மூன்று பெண்கள் வைரமுத்து மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்து அப்படி செய்திருக்க மாட்டார் எனவும் இருவேறுவித கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

சின்மயி – வைரமுத்து

அதே நேரம், சின்மயியை ஆதரிப்பவர்கள்கூட இரு கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

“பதினான்கு வருடங்களுக்கு முன் நடந்தது என்று வைரமுத்து மீது குற்றம்சாட்டுகிறீர்களே.. அப்போதே இதை வெளிப்படுத்தியிருக்கலாமே!

வைரமுத்து குறித்து நீங்கள் கூறும் சம்பவத்துக்குப் பிறகும் உங்கள் திருமணத்துக்கு அவரை அழைத்து வணங்கியது ஏன்..”

–   இந்த இரு கேள்விகளும்தான் சின்மயியை சுற்றி வருகின்றன.

“அப்போது  எனக்கு சிறு வயது. வைரமுத்து அரசியல் செல்வாக்கோடு இருந்தார். ஆகவே அப்போது புகார் கூற முடியவில்லை: என்று முதல்  கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சின்மயி.

இரண்டாவது கேள்விக்கு, “திரைத்துறையில் பலரையும் எனது திருமணத்துக்கு அழைத்த நிலையில் வைரமுத்துவை மட்டும் அழைக்காமல் இருக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

இன்னொரு பக்கம், அவரது தாயார் பத்மாசினி, “வைரமுத்துவை சின்மயி அழைக்கவில்லை. நான்தான் அழைத்தேன்” என்றார்.

மதன் கார்க்கி

இந்த நிலையில், இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சின்மயி தனது திருமணத்துக்கு வைரமுத்து அழைக்கப்பட்டது குறித்து மீண்டும் பேசியிருக்கிறார்.

“வைரமுத்துவை எனது திருமணத்துக்கு அழைக்காவிட்டால், அவர் எழுதிய பாடய சின்மயி இப்படி அவமதித்து விட்டாரே  என்று மக்கள் நினைத்திருப்பார்கள். தவிர திருமண நிகழ்ச்சிக்கு வைரமுத்துவின் மகன்களில் ஒருவரான மதன் கார்க்கியை அழைத்தேன். அப்போது அவர், “என் அப்பாவுக்கு அழைப்பு விடுத்தீர்களா  இல்லையா.” என்று என்னிடம் கேட்டார்.  அதனாலும் வைரமுத்துவை அழைக்க வேண்டியதாயிற்று” என்று சின்மயி தெரிவித்திருக்கிறார்.

இதுவரை இந்த விவகாரத்தில் வைரமுத்துவின் மனைவி பேராசிரியர் பொன்மணியோ அவர்களது மகன்கள் திரைப்பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்துவோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் மதன் கார்க்கி குறித்து சின்மயி தெரிவித்துள்ளார். . இனியேனும் வைரமுத்துவின் மகன்கள் இது குறித்து கருத்து தெரிவிப்பார்களா.. குறைந்தபட்சம் திருமண அழைப்பு குறித்து தான் சின்மயிடம் கேட்டதாக கூறப்படுவது குறித்தாவது மதன் கார்க்கி கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.