இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை:
இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.’
வரும் 1ந்தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதுபோல, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், . வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வானமும் மேகமூட்டத்துடனே காணப்பட்டு வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் , வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.