த்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.

இந்த கோயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஷாம்பித் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்த தகவல்கள் இவை:
+ கற்களால் மட்டுமே ராமர் கோயில் கட்டப்படும். இவற்றின் ஊடாக சுமார் 10 ஆயிரம் செம்பு கம்பிகள் பயன்படுத்தப்படும்.
+ கோயில் கட்டப்படும் மண்ணின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி.யிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
+ நிலநடுக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு, மத்திய கட்டிட ஆராய்ச்சி மையத்தின் கருத்து கேட்கப்படும்.
+ எல் அண்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்.
+ காற்று, வெயில் , தண்ணீர் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கட்டப்படும் ராமர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்படும்.
இந்த தகவல்களை தெரிவித்த அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஷாம்பத் ராய், கோயில் கட்டுமான பணிக்கு உதவ விரும்புவோர், செம்புகளை தானமாக தரலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-பா.பாரதி