நெட்டிசன்:

சுந்தரபுத்தன் அவர்களின் முகநூல் பதிவு:

கான்கிரீட் காடுகள் என, நகரங்களைச் சொல்வது உண்டு. ஆனால் அந்த கான்கிரீட் காடுகளில், நிஜ காடுகளை உருவாக்கி வருகிறார் இத்தாலியைச்
சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் ஸ்டெபனோ போய்ரி. உயரமான தோட்டங்களை  கட்டடங்களில் வளர்த்து புதுமை படைத்துவருகிறார். இவற்றை தோட்டங்கள் என்பதைவிட, காடுகள் எனலாம்.

இத்தாலி மிலன் நகரில் தொடங்கிய அவரது காடு வளர்க்கும் முயற்சிகள் சீனாவையும் சென்றடைந்துவிட்டன.


ஆயிரக்கணக்கான மரங்கள், மூலிகைச் செடிகள், பூச்செடிகள் என கான்கிரிட் வனத்தில் காடு வளர்க்கும் திட்டத்தை
கட்டடக்கலையாக மாற்றிவிட்டார்.

இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஐடியா மிகவும் எளிமையானது. கட்டடங்களில் எக்கச்சக்கமாக மரங்களை வளர்க்கலாம்.
அவற்றை மண்ணில் வளர்த்தால் இடத்தை ஆக்கிரமிக்கும். ஸ்டெபனோ, வெறுமனே கட்டடங்களில் காடுகளை வளர்ப்பதில்லை.
அதில் அழகியலையும் திட்டமிட்டுச் செயல்படுத்துகிறார்.

பல்லுயிர்ச்சூழல்தான் கடைசி இலக்கு. காற்றில் கலந்திருக்கும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவைக் குறைந்து
தூய ஆக்சிஜனை கட்டடக் காடுகள் உற்பத்தி செய்கின்றன.