வங்கியின் வைப்புத் தொகை குறித்த புதிய மசோதா: உண்மை நிலை என்ன?

“நாம் கணக்க வைத்திருக்கும் வங்கி  திவாலானால் அதிகபட்சம் ஒருலட்சம்தான் நமது டிபாசிட் தொகையில் இருந்து கிடைக்குமாமே.. இதற்காக புதிய மசோதா ஒன்று வரப்போகிறதாமே…” என்ற அச்சம் பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

முதலில் புதிய மசோதா, என்கிறார்களே.. அது என்ன என்று பார்ப்போம்.

வங்கிகளைக் கண்காணிக்க ஏற்கனவே ஆர்.பி.ஐ என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது அல்லவ்வா.. தற்போது அதற்கும்  மேலே ஒரு அமைப்பை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. “FRDI – Financial Resolution and Deposit Insurance“ மசோதாவின் படி புதிய  “நிதித் தீர்வாணையம்” என்ற அமைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிதித் தீர்வாணையத்தின் பணி, ஆர்.பி.ஐ சரியா செயல்டுகிறதா என்பதைக் கண்காணிப்பதும்,  தானே களம் இறங்கி ஒவ்வொரு வங்கியின் நிர்வாகத்தைக் கேள்வி கேட்பதுமாகும்.

இதை வைத்துத்தான், “இனி வங்கி திவாலானால், அதகபட்சம் ஒரு லட்சம்தான் கிடைக்கும்.. உங்கள் கணக்கில் கோடி ரூபாய் இருந்தாலும் மீதித்தொகை அம்போ” என்ற யூகம் பரவி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.. வங்கி திவாலானால் உங்கள் கணக்கில் இருந்து அதிகபட்சம் ஒரு லட்சம்தான் கிடைக்கும் என்பதுதான் இப்போதைய நிலையும். மீதித் தொகையை பகுதி பகுதியாக வங்கி திருப்பித் தரலாம்.. அல்லது தராமலும் போகலாம்.

ஆம்.. இப்போதும் அதுதான் நிலை.

ஏனென்றால் வங்கிகள் தங்கள் கணக்காளர்கள் அக்கவுண்ட்டில் இருக்கும் தொகையில் ஒரு லட்ச ரூபாய் வரையில்தான் இன்சூரன்ஸ் செய்திருக்கும்.

ஆக.. இப்போதைய நிலைதான் தொடரப்போகிறது.

சரி, அப்படியானால் புதிதாக, ““நிதித் தீர்வாணையம்” என்பதை உருவாக்கப்போவதால் என்ன பயன்?.

இது நாள் வரை ஒரு வங்கி, மெல்ல மெல்ல நட்டத்தில் மூழ்க ஆரம்பித்து மூடுவிழா நடத்தும் வரை ரிசர்வ் வங்கி உட்பட.. எந்த அமைப்பும் அந்த வங்கியின் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய முடியாது. அதிகாரம் இல்லை.

ஆனால், வர இருக்கும் “நிதித் தீர்வாணையம்”, ஒரு வங்கி நட்டத்தில் சிக்குகிறது என்றாலோ,  வாராக்கடனை வசூலிக்கத் தவறுகிறது என்றாலோ இவை குறித்து கேள்வி கேட் முடியும்.  வங்கி நிர்வாகிகளை மாற்றவும், அந்த வங்கியின் செயல்பாடுகளில் பாதியையோ முழுமையாகவோ பிற வங்கிகளிடம் கொடுத்துச் சரி செய்யவும் உத்தரவிட முடியும்.

விஜய் மல்லையா போன்ற மோசடி பெரும் தொழிலதிபர்களுக்கு கண்மூடித்தனமாக ஏன் பெரும் தொகை தரப்பட்டது.. அவற்றை ஏன் வசூல் செய்ய வில்லை என்று கேள்வி கேட்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால்,   இப்போது போல அரசியல்வாதிகளின் சிபாரிசுகளுக்கு ஏற்ப கார்பரேட்  முதலைகளுக்கு கோட கோடியாக கடன் கொடுக்க முடியாது. லஞ்சம் பெற்றுக் கொண்டு இல்லாத/செயல்படாத ப்ராஜெட்களுக்கு கடன் என்ற பெயரில் பணத்தை  அள்ளிக் கொடுக்க முடியாது.

இன்னொரு விசயம்..வங்கி திவால் என்று அச்சப்படத் தேவையில்லை.  வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின், எந்தவொரு பொதுத்துறை வங்கியும் திவால் ஆனதில்லை.  தனியார் வங்கியில் க்ளோபல் ட்ரஸ்ட் பேங்கைத் தவிர வேறெந்த வங்கியும் திவால் ஆகவில்லை.

அந்த வங்கி திவாலான சூழலிலும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் பேங்க் சுவீகரித்துக் கொண்டு, அதன், கடன் மற்றும் வைப்பு நிதிகளை நிர்வகிக்க ஆரம்பித்தது.

பிறகு ஏன் தேவையற்ற அச்சம் பரப்பப்படுகிறது.

புதிய மசோதா, வங்கிப் பணியாளர்களின் வேலை தரத்தையும் கண்காணிக்கும் என்பதுதான் ஊழியர்கள் பலரை எரிச்சலடைய செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில ஊழியர்கள் முயல்கிறார்கள்.

முக்கி விசயம்… இந்த மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்திற்காகக் காத்திருக்கிறது. விவாதித்து ஒரு வரைவு கொண்டு வந்தபிறகு அதிலுள்ள நிறை குறைகளை ஆராய முனையலாம். மற்றபடி  திருத்தமுடியாத சட்டத்தை இந்த ஜனநாயக  அமைப்பில் எவரும் கொண்டுவந்துவிட முடியாது.

ஆகவே தேவையற்ற பீதியை பரப்பாதீர்.. நம்பாதீர்!

கார்ட்டூன் கேலரி