பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னைப்போல எடப்பாடி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! ஆ.ராஜா

சென்னை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னைப்போல சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்…. முடியுமா? என்று 2ஜி வழக்கில் சிக்கிய திமுக முன்னாள் மத்திய அமைச்ச்ர  ஆ.ராஜா சவால் விடுத்துள்ளார்.

எடப்பாடி மீது நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பான புகார் குறித்து சென்னை உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்றநிலையில் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, உலக வங்கியிடம் கடன் பெற்று சாலைஅமைக்கும் பணி முதலமைச்சரின்  உறவினருக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்  நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்துள்ளதாக கூறிய  ராஜா, , அதற்கான ஆதாரங்களை திமுக நீதிமன்றத்தில் கொடுத்துள்ளதாகவும், அதன்பேரிலேயே உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உள்ளதாக தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசிடம் வெளிப்படைத் தன்மை இல்லை என்று குற்றம் சாட்டிய ராஜா,  2ஜி பிரச்சினையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை நான் எதிர் கொண்டது போல் நெடுஞ்சாலைத் துறை ஊழல் பிரச்சனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொள்ள முடியுமா?

இவ்வாறு  ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.