டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியானது….
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்து. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் குரூப் 1 தேர்வு நடை பெற்றது. காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு தேவையானவர்களை தேர்வு செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்1 தேர்வை நடத்தியது.
இந்த தேர்வை 4ஆயிரத்து199 பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில் தற்போது தேர்வு முடிவகள் வெளியாகி உள்ளது. இவர்களில் 176 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த 176 பேருக்கும் வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் அதில், 85 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
ரிசல்ட்டுகளை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்